வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (08:32 IST)

இன்னும் ஒரு வருடம் திரையரங்குகளை திறக்க வேண்டாம்: பிரபல தயாரிப்பாளர்

இன்னும் ஒரு வருடம் திரையரங்குகளை திறக்க வேண்டாம்
கொரோனா வைரஸ் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதால் இந்த ஆண்டு மட்டுமன்றி அடுத்த ஆண்டும் திரையரங்குகளை திறக்க வேண்டாம் என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல ஆங்கில பட தயாரிப்பாளர் கேமரூன் மாக்கிண்டோஷ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது 2021 ஆம் ஆண்டு முடியும் வரை திரையரங்குகளை திறக்க வேண்டாம் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சமூக இடைவெளியை இன்னும் பல மாதங்களுக்குப் பின் பற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அதனால் அடுத்த ஆண்டு வரை திரையரங்குகளை திறக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
இதனால் தன்னுடைய படங்களும் பாதிக்கப்படும் என்றாலும் பரவாயில்லை என்றும் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் ரூ.5 கோடி முதல் ரூ.2500 கோடி வரை பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான திரைப்படன்க்கள் இந்தியா உட்பட பல நாடுகளில் ரிலீசுக்கு தயாராக இருப்பதால் அடுத்த ஆண்டு வரை திரையரங்கில் திறக்கவேண்டாம் என்ற தயாரிப்பாளர் கேமரூனின் கருத்து எடுபடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்