1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (18:03 IST)

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட டைட்டில் இதுதான்!

கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணிபோஜன் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பதும் இப்போதைக்கு இந்த படம் ’சியான் 60’ என்ற டைட்டிலில் அழைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்து வரும் கார்த்திக் சுப்பராஜ் தனது ஐந்தாவது தயாரிப்பாக தனது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் சார்பில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். நடிகர் வைபவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை அசோக் வீரப்பன் என்பவர் இயக்கியிருந்தார் 
 
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு என்ற ’பபூன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே அட்டகாசமாக இருப்பதால் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது