1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (12:08 IST)

விளம்பர நிறுவனங்களை அதிர்ச்சியடைய வைத்த பிரபல நடிகை

எமி ஜாக்சன் தனது சம்பளத்தை கோடியில் உயர்த்தியதால், இவரை நடிக்க வைக்க முயற்சிக்கும் விளம்பர நிறுவனங்கள் தற்போது திணறி வருகின்றன.


 

 
மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமான அயல்நாட்டு நடிகை எமி ஜாக்சன் பாலிவுட், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது ஷங்கர் இயகத்தில் பிரமாண்டமாக உருவாகும் 2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
 
இவர் பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவரை நடிக்க வைக்க முயற்சித்து வரும் விளம்பர நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
எமி, ஒரு விளம்பரத்திற்கு போட்டோ ஷூட் எடுக்க 1 கோடி ரூபாய் மற்றும் விளம்பரங்களில் நடிக்க 3 கோடி ரூபாய் வரை தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இது விளம்பர நிறூவனங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2.0 படம் வெளியான பின் எமி தனது சம்பளத்தை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.