3 நாட்கள் 100 மில்லியன் டாலர்கள் - வசூலில் அட்டகாசம் செய்யும் எந்திரங்கள்
யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் ட்ரான்ஸ்ஃபார்மர் சீரிஸின் நான்காவது படமான ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் - ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்ஷன் (Transformers: Age of Extinction) அடித்து தூள் கிளப்புகிறது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் - ஜூன் 27 முதல் 29 வரை - 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் ஆக்ஷன் காமெடிப் படமான 22 ஜம்ப் ஸ்ட்ரீட் (22 Jump Street) உள்ளது. சென்ற வார இறுதியில் 15.4 மில்லியன் டாலர்கள் வசூலித்த இப்படம் இதுவரை 139.8 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் ட்ராகன் 2 (How to Train Your Dragon 2) படத்துக்கு 3ஆவது இடம். சென்ற வார இறுதியில் 13.1 மில்லியன் டாலர்களை வசூல் செய்த இப்படம் இதுவரை 121.8 மில்லியன் டாலர்களை வசமாக்கியுள்ளது.
சென்ற வாரம் முதலிடத்தைப் பிடித்த காமெடிப் படமான திங்க் லைக் ஏ மேன் டூ (Think Like a Man Too) இந்த வாரம் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்ற வார இறுதியில் 10.4 மில்லியன் டாலர்களை வசூல் செய்த படம் இதுவரை 48.2 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.