மலேசியாவில் ஷாலினிக்கு முத்தம் கொடுத்த அஜித்.. வைரல் புகைப்படம்..!
நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி தம்பதியினரின் சமீபத்திய முத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
நடிகர் அஜித்குமார் நேற்று மலேசியாவில் நடைபெற்ற கார் பந்தயம் ஒன்றில் தமது குழுவினருடன் கலந்துகொண்டார்.
அஜித்குமாருக்கு ஆதரவளிப்பதற்காக அவரது குடும்பத்தினரும், மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்த பல தமிழ் ரசிகர்களும், சில திரை பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பந்தயத்தின்போது, நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினிக்கு முத்தமிட்டு, கணவன்-மனைவிக்கிடையேயான அன்பை வெளிப்படுத்தினார். மேலும், அவர் தனது மகன் ஆத்விக்கை அன்புடன் கட்டி அணைத்துக்கொண்டார். இந்த உணர்ச்சிபூர்வமான தருணம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட அஜித் - ஷாலினி தம்பதியினரின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
Edited by Mahendran