செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By siva
Last Updated : ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (07:15 IST)

இன்று புரட்டாசி முதல் ஞாயிறு!

இன்று புரட்டாசி முதல் ஞாயிறு!
புரட்டாசி மாதம் என்றாலே இந்து மக்களுக்கு புனிதமான மாதம் என்பதும் அந்த மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே
 
அந்த வகையில் இன்று புரட்டாசி மாதம் முதல் ஞாயிறு என்பதால் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விசேஷமாகக் கொண்டாடி வருகின்றனர். புரட்டாசி மாதம் என்பது வெயில் காற்று குறைந்து மழை ஆரம்பிக்கும் காலம் என்பதும் இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் உடலுக்கு மிகவும் கெடுதல் தரக்கூடியது என்பதும் அதனால் தான் இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது நம்முடைய உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை கெடுக்கும் என்பதாலும் நம் முன்னோர்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட சொல்லி அறிவித்துள்ளனர் 
 
மேலும் புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது குறிப்பிடத்தக்கது அனைத்து பெருமாள் கோயிலிலும் பக்தர்கள் நிரம்பி வழிவதால் என்பதும் பெருமாளின் அருளை இந்த மாதம் முழுவதும் பெறுவதற்கு வணங்கி வழிபடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது