திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 மே 2023 (07:45 IST)

தொடங்கியது மீனாட்சி அம்மன் தேரோட்டம்.. மாசி வீதிகளில் குவிந்த பக்தர்கள்..!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடைபெறுவதை அடுத்து பக்தர்கள் குவிந்துள்ளனர். 
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்ற இடத்தில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. 
 
நான்கு மாசி வீதிகளிலும் தேர் வலம் வரும் என்பதால் அந்த பகுதிகளில் பக்தர்கள் ஏராளமான தேரை பார்த்து வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர் வலம் வரும் 4 மாச வீதிகளில் பக்தர்கள் ஏராளமான குவிந்து இருப்பதால் அந்த பகுதிகளில்  போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அங்கமான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை நடைபெற உள்ளதால் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva