Daily Horoscope
✕

ஆன்லைனில் அங்கப்பிரதட்சனை டோக்கன்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Written By Siva
Updated: வெள்ளி, 25 நவம்பர் 2022 (17:52 IST)
திருப்பதி கோவிலில் அங்கப்பிரதட்சண செய்வதற்கான டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் அங்கப்பிரதட்சண தரிசனம் செய்பவர்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
 
இன்று அதாவது நவம்பர் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அங்கப்பிரதட்சண டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆன்லைனில் அங்கப்பிரதட்சண முடிவு செய்து முன்பதிவு செய்து அந்த நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க லாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இணையதளம் மூலம் அங்கப்பிரதட்சண டோக்கன்களை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

அடுத்த கட்டுரையில்
Show comments