வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2022 (22:22 IST)

இரட்டை திருப்பதி கோவிலில் பிரமோற்சவ திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்

irattai thirupathi
இரட்டை திருப்பதி கோவிலில் பிரமோற்சவ திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
நவதிருப்பதிகளில் ஒன்றான இரட்டை திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருவதை அடுத்து அங்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 
 
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இரட்டை திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது 
 
இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து தினமும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இரட்டை திருப்பதி கோயிலில் கருட சேவையை பார்க்க ஸ்ரீவைகுண்டம் உள்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த பிரம்மோற்சவ சேவையை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இரட்டை திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva