1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (18:36 IST)

திருப்பரங்குன்றம் தேர்த்திருவிழா.. தேதியை அறிவித்த நிர்வாகிகள்..!

பங்குனி திருவிழாவை ஒட்டி நடைபெறும் திருப்பரங்குன்றம் தேர் திருவிழா மிகவும் விசேஷமாக நடக்கும் என்பதை அடுத்து இந்த தேர் திருவிழா ஏப்ரல் ஒன்பதாம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
 
தற்போது தேரின் சக்கரங்கள் பொருத்தும் பணி தயாராகி வருவதாகவும் தேரின் அடிப்பாகங்கள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
இரும்பில் ஆன பெரிய சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக், இரும்பிலான பாதுகாப்பு உள் சக்கரங்கள் என அதிநவீனமாக இந்த ஆண்டு தேர்வு திருவிழா நடைபெறும் என்றும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி நடைபெறும் இந்த மகா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
46 அடி உயரம் 21 அடி அகலம் 21 அடி நீளம் கொண்ட இந்த தேரின் அலங்கார பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
 
Edited by Mahendran