1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (18:28 IST)

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம் மகிமைகள்..!

Tiruparangundram
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முதல் வீடாக திகழ்ந்து வருகிறது என்பதும் சூரனை வென்ற முருகனுக்கு தன் மகளை தேவேந்திரன் பரிசாக கொடுத்த திருத்தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஐராவதம் என்னும் தேவலோகத்து யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானையை முருகன் மணம் செய்த விழா இங்கு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும்.  
 
இந்த கோவிலில் உள்ள படிகளில் ஏறும்போது சரவணபவா எனும் ஆறு எழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே சென்றால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
 
Edited by Mahendran