ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (19:06 IST)

குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு..!

Kula Deivam new
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் உண்டு என்பதும் அந்த குலதெய்வ வழிபாட்டை வணங்கி வந்தாலே வாழ்வில் உள்ள அனைத்து துன்பங்களும் விலகிப் போய்விடும் என்றும் கூறப்படுவதுண்டு. 
 
தீராத நோய் தீர்தல், கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது,  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடப்பது உள்ளிட்ட பல பலன்களை குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் பெறலாம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
குலதெய்வ வழிபாடு என்பது ஆதி காலத்தில் இருந்தே நாம் முன்னோர்கள் கொண்டு வந்துள்ளனர் என்பதும்  இந்து மதத்தின் அடிப்படையே குலதெய்வம் வழிபாடு தான் என்றும் கூறப்படுகிறது. 
 
ஒரு மனிதன் தனது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வளங்களையும் குலதெய்வ வழிபாடு கொடுக்கின்றது என்றும் பகவத் கீதை இடையே கூறி இருப்பதாகவும் தெரிகிறது.  
 
மொத்தத்தில் ஒவ்வொருவரும் தங்கள் குல தெய்வத்தை வணங்கினாலே வாழ்க்கையில் இன்பமாக வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran