கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணம்
Updated: வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (16:45 IST)
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமண கோலத்தில் அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9ம் நாளான நேற்று அம்மன் எட்டு திசைக்கு சென்று போரிடும் நிகழ்ச்சியாக திக்குவிஜயம் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோயில் சேர்த்தி மண்டபத்தில் மீனாட்சியும், சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்துடன் காட்சியளித்தனர்.
சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளான இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.