1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. sita marriage in tirupthi

திருப்பதியில் சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம்: தேதி அறிவிப்பு..!

tirupathi
திருமலை திருப்பதியில் சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
 
கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி மாலை 4 மணியளவில் சீதா, ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. அதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் சிறப்பான சேவையை வழங்க வேண்டும்.
 
பக்தர்களுக்கு வினியோகம் செய்வதற்காக அன்னப்பிரசாதம், லட்டு, அட்சதை, மஞ்சள், குங்கும பாக்கெட்டுகள், குடிநீர் பாக்கெட்டுகள் போன்றவற்றை கொண்ட பைகளை தயார் செய்து கொள்ளுங்கள். சேவை தொடர்பான ஸ்ரீவாரி சேவா தொண்டர்களுக்கு பாஸ்கள் வழங்கப்படும், நீங்கள் அனைவரும் பொறுமையுடன் செயல்பட்டு பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும். 
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (23-03-2023)!