வியாழன், 30 மார்ச் 2023
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2023 (19:59 IST)

சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 19-ந் தேதி முதல் 4 நாட்கள் அனுமதி!

sathuragiri
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரிக்கு மார்ச் 19ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
 
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் வரும் 21ஆம் தேதி அமாவாசை வருவதை அடுத்து 19ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு சதுரகிரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை ஏறலாம் என்றும் ஆனால் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியோர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran