1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: புதன், 11 மே 2022 (22:53 IST)

கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் பூச்செரிதழ் நிகழ்ச்சி

kannika parameshwari
கரூர் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் பூச்செரிதழ் நிகழ்ச்சி – பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
 
கரூர் நகரின் மையப்பகுதியில் ஜவஹர் பஜார் கடைத்தெருவில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வாசவி ஜெயந்தியை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு பூத்தட்டு எனப்படும் பூச்செரிதழ் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில், 1500 க்கும் மேற்பட்ட பூத்தட்டுகள் கொண்டுவரப்பட்டும் அனைத்து விதமான புஷ்பங்களும் வைக்கப்பட்டு மூலவர் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா தாயிக்கு பூச்செரிதழ் மிக மிக சிறப்பாக நடத்தப்பட்டது. பரிவார தெய்வங்களான லலிதாம்பிகை, விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவக்கிரஹங்கள், பிள்ளையார், அருள்மிகு ஸ்ரீ வள்ளி, தெய்வானை உடனுறையாகிய முருகக்கடவுளுக்கும் சிறப்பாக பூச்செரிதழ் விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று செவ்வாய்க்கிழமையான இன்று மங்கலவாரம் என்பதினால், மஞ்சள் உடை அணிந்து பெண்கள் திரளானோர் பங்கேற்று பக்தி பாடல்கள் பாடி மகிழ்ந்து பூத்தட்டுகளை அம்மனுக்கு செலுத்தினார்கள்.