பழனி கோவிலில் தைப்பூச திருவிழா: கொடியேற்றும் தேதி அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தந்து முருகனை வழிபடுவார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்தநிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பழனி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகள் செய்து கொள்ள செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் பழனி கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் என்றும் தைப்பூசத் தேரோட்டம் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து ஜனவரி 29ஆம் தேதி பழனி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட விற்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
Edited by Mahendran