நிதியமைச்சர் பிடிஆர் சென்ற ரோப் கார் திடீர் பழுது: பழனியில் பரபரப்பு!
நிதியமைச்சர் பிடிஆர் சென்ற ரோப் கார் திடீர் பழுது: பழனியில் பரபரப்பு!
பழனியில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ரோப் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த ரோப் கார் திடீரென பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் கோவிலுக்கு ரோப் கார் மூலமாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அவர் அந்தரத்தில் தொங்கிய படியே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சில நிமிடங்களுக்கு பிறகு மின்சாரம் மீண்டும் வந்தவுடன் ரோப்கார் இயக்கப்பட்டது. அதன் பின் அவர் பழனி முருகனை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப்கார் மின்தடை காரணமாக அந்தரத்தில் சிறிது நேரம் தொங்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Edited by Siva