1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (23:28 IST)

பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அறிவிப்பு

pathmavathi thayar
சென்னை தி. நகரிலுள்ள பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது, இக்கோவியில் மண்டல பூஜைகள் நடந்து வரும் நிலையில்,  பக்தர்கள் தரிசனம் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 5 மணி முதல் 5:30 வரை சுப்ரபாத தரிசனம்  எனவும், 6:30 மணிக்கு ஆராதனை நேரமும்,6:30 முதல் 7 மணி வரை அர்ச்சனை தரிசனம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரையும், மதியம் 12 மணி முஹ்டல் 2:30 மணி வரையும், மாலை 5:45 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் சர்வ தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.