1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (20:03 IST)

கடன் பிரச்சனைகளை தீர்க்கும் கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில்.

temple
கடன் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை கோனூர் நாடு கோட்டை தெருவில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயில் சென்றால் தீர்ந்துவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். 
 
தீராத கடன் தொல்லை இருந்தால் இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபாடு செய்து 48 நாட்கள் வழிபாடு செய்தால் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும் என்றும் முக்கியமாக கடன் பிரச்சனை, தீராத நோய்கள் தீரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 21 பிரதோஷ நாட்களில் இந்த கோயிலில் உள்ள நந்தி பெருமானுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 
 
தீராத கடன் தொல்லை தீர 21 திங்கட்கிழமைகளில் இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டால் கடன் தொல்லை நீங்குவதோடு யோகம் நிறைந்த வாழ்க்கை அமையும் என்றும் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran