திங்கள், 8 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 செப்டம்பர் 2025 (17:59 IST)

மறைந்த முன்னோர்களுக்கான சடங்குகள் செய்ய உகந்த காலம்.. 3 வழிகள் மற்றும் அதன் முக்கியத்துவம்

மறைந்த முன்னோர்களுக்கான சடங்குகள் செய்ய உகந்த காலம்.. 3 வழிகள் மற்றும் அதன் முக்கியத்துவம்
மறைந்த முன்னோர்களுக்கான சடங்குகள் செய்ய உகந்த காலமாக மகாளய பட்சம் கருதப்படுகிறது. இந்த நாட்களில் பித்ருக்களுக்கான கடமைகளை மூன்று வழிகளில் செய்யலாம்.
 
மூன்று வழிகள்:
 
1. பார்வணம்: இந்த முறையில், பித்ருக்களாக கருதி ஆறு பிராமணர்களை அழைத்து, ஹோமம் செய்து, அவர்களுக்கு உணவு பரிமாற வேண்டும். இது தந்தை, தாய், தாத்தா, பாட்டி போன்ற மூதாதையர்களுக்கு செய்யப்படும் ஒரு விரிவான சடங்கு.
 
2. ஹிரண்யம்: அரிசி, காய்கறிகள் போன்ற பொருட்களை தானமாக கொடுத்து, அதற்கு பதிலாக தர்ப்பணம் செய்வது இந்த முறை.
 
த3. ர்ப்பணம்: இது அமாவாசை நாட்களில் செய்வது போல, தர்ப்பணம் மட்டும் செய்வது. இந்த மூன்று முறைகளில் ஏதாவது ஒன்றை செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
 
மகாளயத்தின் அனைத்து நாட்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும், சில குறிப்பிட்ட நாட்கள் மிகவும் உன்னதமானவையாகக் கருதப்படுகின்றன. ஒரு நாள் மட்டும் மகாளயம் செய்ய விரும்புபவர்கள், பின்வரும் நாட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:
 
மகா பரணி (செப்டம்பர் 12, வெள்ளி)
 
மத்யாஷ்டமி (செப்டம்பர் 14, ஞாயிறு)
 
மகாதிவ்ய தீபாதம் (செப்டம்பர் 15, திங்கள்)
 
கஜச்சாயா (செப்டம்பர் 19, வெள்ளி)
 
Edited by Mahendran