புதன், 13 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (18:59 IST)

ஐப்பசி மாத பிரதோஷம்.. சதுரகிரியில் பக்தர்கள் கூட்டம் குறைவு.. என்ன காரணம்?

Sadhuragiri
ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமி காரணமாக நான்கு நாட்கள் சதுரகிரியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பக்தர்கள் கூட்டம் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று முதல் நவம்பர் 16 வரை 4 நாட்கள் சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கிய நிலையில், இன்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 
 
ஆனால் இந்த பூஜையில் குறைவான எண்ணிக்கையில்தான் பக்தர்கள் வருகை தந்ததாக செய்திகள் வெளியானது. மழை பெய்ததால் பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்ததாகவும், மழை பெய்த காரணத்தினால் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து, பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில், இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளியானது. நாளை ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, கூடுதலாக பக்தர்கள் வருகை தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran