வியாழன், 21 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 9 நவம்பர் 2024 (17:29 IST)

சிவலிங்கத்தில் இருந்து தோன்றிய அபூர்வ நீரூற்று: திண்டுக்கல் அருகே பக்தர்கள் பரவசம்..

திண்டுக்கல் அருகே பாதாள சிவலிங்கத்திலிருந்து அபூர்வ நீரூற்று தோன்றியதை அடுத்து, அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் பரவசமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் என்ற பகுதியில் ஸ்ரீ வாஸ்தீஸ்வரர் என்ற கோவில் உள்ளது. இதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், ஒவ்வொரு மாதமும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், பாதாள சிவலிங்கத்தை சுற்றி சுமார் ஒரு அடியில் இருந்து இரண்டு அடி வரை திடீரென நீரூற்று வெளியேறியததாகவும், தண்ணீர் முழுவதும் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்கு ஊற்று பெருக்கெடுத்து தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை கண்ட பக்தர்கள், அந்த தண்ணீரை புனித நீராக கருதி வீடுகளுக்கு பிடித்து செல்வதாகவும், இந்த தண்ணீர் கும்பாபிஷேகத்திற்கு புனித நீராக பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இந்த தண்ணீரால் குணமாவதாகவும், வீடுகள் மற்றும் அலுவலகத்தில் இந்த தண்ணீரை வைத்தால் தீய சக்திகள் விலகிவிடும் என்றும் அந்த பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் காணிக்கையாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran