செவ்வாய், 21 மார்ச் 2023
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated: வியாழன், 7 ஜூலை 2022 (17:24 IST)

துர்க்கை அம்மன் வழிபாட்டு பலன்கள் !!

Spirituality
ஒரு வருட காலம் துர்க்கை அம்மனை பூஜித்து வந்தால், அந்த நபருக்கு முக்தி வசமாகும். துர்க்கை அர்ச்சனை செய்பவரின் பாவங்கள், அவனிடம் தங்குவதில்லை. தாமரை இலை தண்ணீர் போல அவனை விட்டு விலகியே நிற்கும்.


தூங்கும் போதும், நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.

ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு மிகவும் பிடித்த மலர், ‘நீலோத் பலம்’. இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.

துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்தியம் வாசிக்கக் கூடாது. துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக பெயரிட்டுக் கூறுகின்றது, மந்திர சாஸ்திரம். அவை, குமாரி, த்ரிமூர்த்தி, கல்யாணி, ரோஹிணி, காளிகா, சண்டிகை, சாம்பவி, துர்க்கா, சுபத்ரா.

துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாவத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயம், சத்ரு ஆகியவற்றை அழிப்பவள் என்று பொருள்.