1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (11:36 IST)

தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள சில நகரங்களில் நடக்கும் விசேஷங்களுக்கு ஏற்ப உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் ஐந்தாம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 
 
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் ஐந்தாம் தேதி உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் தமிழக அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அதே நேரத்தில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மற்றும் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran