Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணன் கோவில் இருப்பதால் ‘கிருஷ்ணன் கோவில்’ என்று பெயர் பெற்ற ஊர்..!

Written By Mahendran
Updated: வியாழன், 5 அக்டோபர் 2023 (19:11 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் கிருஷ்ணன் கோயில் இருப்பதால் அந்த ஊரின் பெயர் கிருஷ்ணன் கோயில் என பெயர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடசேரி என்ற பகுதியில் கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது. இங்கு அழகான கிருஷ்ணன் கோயில் இருப்பதால்தான் இந்த ஊரின் பெயர் கிருஷ்ணன் கோயில் என வந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

இங்குள்ள மூலவர் பாலகிருஷ்ணன் என்ற குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார் என்பதும் ஒவ்வொரு கிருஷ்ண ஜெயந்தி அன்றும் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த கோவிலில் உள்ள பாலகிருஷ்ணனை தரிசனம் செய்தால் அனைத்து துன்பங்களும் விலகும் என்றும் அவர் பக்தர்களுக்கு வாரி வாரி வரங்களை வழங்குவார் என்றும் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் வெள்ளி தொட்டிலில் பாலகிருஷ்ணனை படுக்க வைத்து தாலாட்டு பாடி தூங்க வைக்கும் நிகழ்வும் இந்த கோவிலில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

அடுத்த கட்டுரையில்
Show comments