செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (00:24 IST)

துர்மரணம் அடைந்தவர்களை வணங்குவது சரியா...?

ஆவிகள் பற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது. திடீர் விபத்து, தற்கொலை, போர், கலகம், கொலை, எதிர்பாராத மரணம்  இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை, எங்கே இறந்தார்களோ, அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும். இறந்தது ஆண்  எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.
 
நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும். சுமார் 20 அடி சுற்றளவுக்குள் சுற்றும். வெளியே எங்கும் செல்ல முடியாது. உயரேயும் பறக்க முடியாது. இதைத்தான் மந்திர தந்திரங்கள் தெரிந்தவர்கள் தீய செயலுக்கு பயன்படுத்துவார்கள். அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு  விடுதலை கிடைத்துவிடும். 
 
துர்மரண ஆவிகள் குழந்தைப் பேற்றைத் தடுக்கும் ஆற்றல் நிறைந்து காணப்படும். ஆண், பெண் இருவருக்கும் குழந்தைப் பேறுக்குண்டான தகுதி இருந்தாலும் சில நேரங்களில் இதுபோன்ற துர் ஆவிகளால் குழந்தைப் பேறு தடுத்து நிறுத் தப்படும். 
 
துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது. அவர்களை வணங்கக்கூடாது. அவர்களுக்கு படையல் போடக்கூடாது. உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம். 
 
துர்மரணமடைந்தது வாலிப வயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும். வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிப வயதுப் பையனைத் துன்புறுத்தும். கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில் மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள் தாக்காது. இதனால்தான் பெண்கள் அடிக்கடி மருதாணி அணிய வேண்டும் என்று  முன்னோர்கள் கூறினார்கள்.