திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (22:11 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் விழாக்கள் !- தேவஸ்தானம் அறிவிப்பு

tirupathi
வரும் ஏப்ரல் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள் பற்றி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். இக்கோயிலுக்கு நாள் தோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சுவாமியை தரிசிக்க வருகை புரிகின்றன.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்கும் விழாக்களை பற்றி தேவஸ்தான் அறிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 1- சர்வ ஏகாதசி,15 வது பாலகண்ட அகண்ட பாராயணம் தொடக்கம்.ஏப்ரல் -3 ஆம் தேதியில் இருந்து 5 ஆம் தேதி வரை வரு,டாந்திர வசந்தோற்சவம் 6 ஆம் தேதி தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம், பவுர்ணமி கருடசேவை, 16 ஆம் தேதி பாஷ்யங்கார் உற்சவம் தொடக்கம், 23 ஆம் தேதி அட்சய திருதியை, 25 ஆம் தேதி பாஷ்யங்கார் சாத்துமுறை, ராமானுஜர் ஜெயந்தி, சங்கர ஜெயந்தி, அனந்தாழ்வார் உற்சவம் தொடக்கம், 29 ஆம் தேதி முதல் மே மாதம் 1 ஆம் தேதி வ்அரை பத்மாவதி பரிணய உற்சவம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.