செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified புதன், 28 செப்டம்பர் 2022 (13:08 IST)

கள்ளக்குறிச்சியில் 'பொன்னியின் செல்வன்' நவராத்திரி கொலு! புகைப்படங்கள் வைரல்!

kolu
கள்ளக்குறிச்சியில் 'பொன்னியின் செல்வன்' நவராத்திரி கொலு! புகைப்படங்கள் வைரல்!
தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பலர் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் பொன்னியின் செல்வன் கொலு வைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்துள்ள இந்த பொன்னியின் செல்வன் நவராத்திரி கொலுவில் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள கேரக்டர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன 
 
வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், கரிகாலன், சுந்தர சோழன், பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர், நந்தினி, பூங்குழலி, ஆழ்வார்க்கடியான், உள்ளிட்ட பல கேரக்டர்களின் பொம்மைகளை வைத்து கொலு அமைத்து இருப்பதை பார்த்து பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தை அடைந்துள்ளனர் 
 
பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த கொலு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது