வியாழன், 11 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 10 டிசம்பர் 2025 (17:59 IST)

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!
பிகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில், புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோயில் கட்டும் திட்டத்திற்கு பிகார் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
இந்த திட்டத்திற்காக, பாட்னாவை ஒட்டியுள்ள மோகாம காஸ் பகுதியில் உள்ள 10.11 ஏக்கர் நிலம், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நீண்டகால குத்தகைக்கு பிகார் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் வெறும் ரூ.1/- மட்டுமே ஆகும்.
 
இந்த சலுகையை வழங்கிய பிகார் அரசுக்கும், சுற்றுலா துறை மேம்பாட்டு கழகத்தின் இயக்குநருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் தலைவர் பி.ஆர். நாயுடு நன்றி தெரிவித்துள்ளார்.
 
இந்த அனுமதியை தொடர்ந்து, TTD பிரதிநிதிகள் விரைவில் கோயில் கட்டுமான பணிகள் குறித்து ஆலோசித்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கவுள்ளனர். இதன் மூலம், வடக்கு இந்தியாவில் உள்ள பாட்னா பிராந்திய பக்தர்களுக்கு திருப்பதி பெருமாளை வழிபடும் வாய்ப்பு கிடைக்கும்.
 
Edited by Mahendran