திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (09:03 IST)

அட்ஷய திருதியையில் தங்கம் மட்டும்தான் வாங்கணுமா? என்னென்ன வாங்கலாம்?

Akshaya Tritiya things to buy
அட்ஷய திருதியை என்றாலே தங்கம்தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. ஆனால் தங்கம் வாங்க முடியாவிட்டாலும் வேறு சில மங்களகரமான பொருட்களை வாங்கினாலும் வீட்டில் செல்வம் பெருகும்.

சித்திரை மாதத்தின் வளர்பிறை காலத்தில் வரும் மூன்றாவது திதியானது திருதியை திதி. இந்த திதியில் தான் ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இடம்பெற்றாள். இதே நாளில்தான் அஷ்ட லட்சுமிகளும் தோன்றி சகல சௌபாக்கியங்களையும் அளிக்க தொடங்கினர். அதனால் இந்த நல்ல நாளில் தங்கம் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும்.

பொதுவாகவே அட்ஷய திருதியை என்றாலே பலரும் தங்கம் வாங்கவே நினைப்பர். தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளிப் பொருட்களையாவது வாங்குவர். தங்கமும் வெள்ளியும் நவகிரகங்களில் இருவரான குருவையும், சுக்கிரனையும் குறிக்கின்றது. ஆனால் தங்கம் தவிர ஸ்ரீமகாலட்சுமியை குறிக்கும் மங்களகரமான சில பொருட்களை வாங்கினாலும் வீட்டில் செல்வம் பெருகும், மகிழ்ச்சி, மன அமைதி கூடும்.

Lord Kubera Lakshmi


அக்‌ஷய திருதியை நாளில் கோவில் பொருட்களை ஏலத்தில் வாங்குவது நல்லது. அது சிறிய பொருளாக இருந்தாலும் சுபிக்‌ஷத்தை அளிக்கும். அதுபோல நவ தானியங்கள், உப்பு, மஞ்சள் உள்ளிட்டவை உணவு பொருட்களாக இருந்தாலும் தனமாகிய தங்கம், வெள்ளிக்கு முன்னர் அதற்கு நிகராக இருந்தவை என்பதால் அவற்றை வாங்குவது நல்ல பலனை தரும்.

அக்‌ஷய திருதியையில் புதிய சாமி படம், வெண்கல மணி, குங்குமச்சிமிழ், காமாட்சி விளக்கு, சந்தனம் உள்ளிட்ட தெய்வீக அம்சம் கொண்ட பொருட்களையும் வீட்டில் வாங்கி வைத்தால் சுபிக்‌ஷம் உண்டாகும்.