சனி, 28 செப்டம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (15:17 IST)

அன்றாடம் வீட்டில் சாம்பிராணி போடுவதால் இத்தனை பலன்களா...?

Sambrani
சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது, எனவே, வீடுகளில் நாம் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகையிட்டு வர, கிருமிகள் விலகி விடும்.


வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த பாதிப்புகளும் நேராது என்ற எண்ணத்திலேயே, வீடுகளில் சாம்பிராணி புகை இட்டனர்.

வீடுகளில் வாரமிருமுறை சாம்பிராணி புகையை இட்டு வர, நச்சுக்கள் எல்லாம், விலகி விடும். இப்போது நாம் உபயோகிக்கும் செயற்கை சாம்பிராணிகளால் பலன் ஏதுமில்லை. மாறாக, அவற்றின் செயற்கைத் தன்மை சிலருக்கு ஒவ்வாமையை, உண்டாக்கி விடலாம்.

செல்வ செழிப்பு உண்டாகும் தொழில் செய்யும் இடத்தில் மக்கள் வரவு அதிகம் ஆகும்.வியாபாரம் பெருகும்.

மழைக்காலங்களில், வீடுகளில், சாம்பிராணியுடன் வேப்பிலை சருகு, நொச்சி இலை சருகு இவற்றை சேர்த்து, படுக்கை அறைகளில் புகை இட்டு வர, மழைக்கால வியாதிகளைப் பரப்பும் கொசுக்கள் எல்லாம் நொடியில் ஓடி விடும், இரவில் கொசுக்கடி இல்லாத, சுகமான உறக்கத்தை அனுபவிக்கலாம்.

சளித் தொந்தரவு, தலைவலி, அதிகத் தும்மல், பொடுகு, பேன் தொல்லை, தலைமுடி உதிர்தல், மூக்கில் நீர்வடிதல், கேச நோய்கள் போன்ற தொந்தரவுகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தலைக்குக் குளித்த பின்னர் கூந்தலை உலர்த்தவேண்டியது  மிக அவசியம். சரியாக உலர்த்தாவிட்டால் தலையில் நீர் கோர்த்தல், தலைபாரம், சளி, தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குடலில் சேரும் வாயுவை,கபத்தை வெளியேற்றுவதற்கும், மூலம், வயிற்றுப் போக்கு போன்றவற்றைப் போக்குவதற்கும், வாதங்கள் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்துவற்காகவும் வெள்ளைக் குங்கிலியம் பயன்படுத்தப்படுகிறது.