திருவண்ணாமலை கிரிவலம் வருவதால் கிடைக்கும் பலன்கள் !!
திருவண்ணாமலை அக்னி மலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணம் என்றால் சிவப்பு என்று பொருள். இந்த கோயில் அக்னி கோயில்.
அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரகன். ஆகவே இந்த கோயிலில் மட்டுமே சிவ பெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும். அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.
ஆயுளைக்கூட்டும் ஆற்றல் கொண்டது திருக்கடையூர். சனித்தொல்லையில் இருந்து விடுப்பது திருநள்ளாறு. நோய்களில் இருந்து நம்மை காப்பது வைத்தீஸ்வரன் கோயில். அது போல் ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.
அண்ணாமலையை சுற்றி வருவது சம்சாரக்கடலை கடக்கும் தெப்பமாக அமையும். அதுபோல் ஏழு நகரங்களையும் கடந்து முக்தி அடையும் ஏணியம்மன் கோயிக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தமாக போற்றப்படுகிறது. மகிடாசுரனை வதம் செய்த பார்வதி தேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் வீசி தோற்றுவித்தது.
மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜிய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். நினைப்பவர்களுக்கே இந்த பலன் என்றால் மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன் கைலாசத்திற்குள், நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி உயர் பதவி கிடைக்கபெறுவார்கள் என்று அருணாசல் புராணம் தெரிவிக்கிறது.