1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பேக்கிங் சோடா சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தருமா...?

பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்சனைகளுள் ஒன்று முகத்தில் வரும் கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகளுக்கு உடனடி தீர்வு தரக்கூடியது  தான் பேக்கிங் சோடா. 

* 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம்  கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்ததும் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவ வேண்டும்.
 
* 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 15  நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்களுக்கு இப்பிரச்சனை அதிகம் இருந்தால், வாரத்திற்கு 2 முறை  செய்து வரலாம்.
 
* பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வர, எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் அமிலம் விரைவில் கரும்புள்ளிகள்  வெளியேறச் செய்யும். 
 
* வாரம் ஒரு முறை பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி  சருமத்தை பளிங்கு போல் மின்னச் செய்யும்.
 
குறிப்பு:
 
ஆனால் இம்முறை சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றதல்ல. இந்த முறைகளில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை பயன்படுத்தி சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை  நீக்கலாம்.
 
பேக்கிங் சோடாவில் இருக்கும் அதிக அளவு சோடியம் எல்லோருக்கும் ஏற்றது அல்ல. அதனால் இதனை உபயோகிக்கும் பொழுது அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். பேக்கிங் சோடாவை மிக மிகக் குறைந்த அளவே பயன்படுத்தி பலன் பெற முடியும்.
 
பேக்கிங் சோடா, சரும பிரச்சனை, முக பராமரிப்பு, அழகு குறிப்புகள், ஆரோக்கியம், Facial care, baking soda, beauty tips, health
 
Will baking soda solve skin problems...?