புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (09:22 IST)

கொய்யா பழத்தை கொண்டு சரும அழகை அதிகரிக்க வேண்டுமா...?

வைட்டமின் சி, பி மற்றும் ஏ ஆகிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இந்த பழத்தை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் முகத்தை அழகுபடுத்தவும் பயன்படுகிறது.


ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன.  இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும். சருமத்தை தளர்த்தி மென்மையாக்கும்.

இப்பழத்தில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, எரியம், மாவுசத்து, தாதுச்சத்து, புரதம், கொழுப்பு போன்ற பல சத்துக்கள் உள்ளன.

இப்பழத்தில் அதிகமாக வைட்டமின் ‘சி’ உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கும், பற்கள் வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் மிக முக்கியமான சத்தாக வைட்டமின் ‘சி’ இருப்பது சிறப்பாகும்.

கொய்யா பழத்தின் தோலை சீவி எடுத்துக் கொண்டு அந்த தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும்.

இப்பழத்தில் வைட்டமின்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு அளித்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கும். முகத்திற்கு பொலிவான தோற்றத்தை அளிக்கும்.

கொய்யாவை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நீர் கலந்து பசைபோன்று தயாரிக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.