வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (15:33 IST)

சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும் பால் ஆடை !!

பால் உடலுக்கு எப்படி சக்தியைக் கொடுக்கிறதோ, அப்படியே நம் சரும அழகுக்கும் பால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


பால் சிறத்ந மாய்சரைசராகவும், க்ளென்சராகவும் பயன்படுகிறது. சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் பால் உதவும். ஆடை எடுக்கப்பட்ட பால் எல்லாவித சரும வகைக்கும் ஏற்றது. முகத்தில் பேக் போடும் பவுடருடன்,பால் கலந்து உபயோகிக்கலாம்.

ஏடோடு இருக்கும் பால் உலர் சருமத்திற்கு ஏற்றதாகும். எண்ணெய் சருமத்திற்கு ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது மோர் உபயோகிக்கலாம். கண்களின் அடியில் உள்ள கருவளையத்தைப் போகக்க பாலாடை க்ரீம் பூசுவது நல்லது.

தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுபவர்களுக்கும் அதிகமாக பயணம் மேற்கொள்பவர்களுக்கம் பால் நல்லது. காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகத்தில் பூசி சிறிது நேரத்தில் குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பளிச்தான்.

எண்ணெய் வழியும் சருமத்திற்கு மோரில் பஞ்சை நனைத்து முகம், கழுத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

தயிரை முகத்தில் அப்படியே தடவினால் அதிலுள்ள கொழுப்புச் சத்து சருமத் துவாரங்களை அடைத்து விடும். குறிப்பாக எண்ணெய் சருமம் உடையவர்கள், தயிரை முகத்திற்கு உபயோகிக்கக்கூடாது.

முகத்திற்கு மசாஜ் செய்ய வெண்ணெய் பயன்படுத்தலாம். ஆனால் முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் வெண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். வெண்ணெயைத் தலையில் தேய்த்து தலைமுடியை அலசலாம்.