வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (18:33 IST)

முடி வளர்ச்சி மற்றும் சரும நிறத்தை மேம்படுத்துவதற்கான சில குறிப்புகள் !!

1. நெய்-எண்ணெய்: முடி வளர்ச்சியைத் தூண்டுதல், உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்கவைத்தல், முடியை மென்மையாக்குதல், பொடுகை போக்குதல் என இந்த எண்ணெய் சிகிச்சை பலன் அளிக்கக்கூடியது.


தேவையானவை: நெய்- 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்- 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: தலைக்கு வழக்கமாக தேய்க்கும் எண்ணெய்யுடன் நெய்யை சேர்த்து சிறு தீயில் லேசாக உருக்கவும். நெய் உருக தொடங்கியதும் அந்த எண்ணெய் கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு கூந்தல் முழுவதும் தேய்த்துவிட்டு ஒரு மணிநேரம் கழித்து ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.

2. சரும நிறத்தை மேம்படுத்துவதற்கும், வயதான தோற்றத்தை தடுத்து இளமையை தக்கவைப்பதற்கும் பாலை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

பால்-அரிசி: இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சருமத்தை இயற்கையாக சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பானாகவும் செயல்படக்கூடியது. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்.

தேவையானவை: பால் - 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன். செய்முறை: ஒரு கிண்ணத்தில் பாலையும், அரிசி மாவையும் ஒன்றாக சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அந்த கலவையை முகத்தில் தடவிவிட்டு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.