1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (17:46 IST)

உடல் வலிமைக்கு பெரிதும் உதவும் பார்லி !!

பார்லி அரிசியில் பல வகையான சத்துப் பொருள்களும், சர்க்கரையும் அடங்கியுள்ளது. ஊட்டச்சத்து மிகுந்த பார்லி உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது.


கெட்ட கொலஸ்ட்ராலைப் (எல்.டி.எல்) போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

பார்லி அரிசியின் மாவுப் பகுதியில் நீரில் கரையக் கூடியதும், பிசுபிசுப்புத் தன்மை உடையதுமான “டெக்ஸ்ட்ரின்” என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன.

பார்லியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பார்லியில் உள்ள வைட்டமின் பி, நரம்புகளைப் பலப்படுத்தும். தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக்கஞ்சி அருந்தினால் கொலஸ்ட்ரால் கணிசமாகக் குறையும்.

இதய நோயாளிகளுக்கு பார்லி அற்பு தமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

அன்றாட உணவில் பார்லியை சேர்த்துக் கொள்வது பித்தப்பை கற்கள் உண்டாகாமல் உடல்நலத்தை பாதுகாக்கிறது. இதிலிருக்கும் எளிமையாக கரையும் தன்மையுடைய புரதம், பித்தப்பை கற்கள் அபாயத்தை வெகுவாக குறைக்க செய்கிறது.

பார்லி உட்கொள்வதால், உடற்சக்தி அதிகரிக்கிறது, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.