1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (09:47 IST)

பளபளப்பான முகத்தை பெற சில எளிமையான வழிகள் !!

coconut milk
பளபளப்பான முகத்தை பெற அருமையான வழி உள்ளது. தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம், முடியின் அழகை பராமரிக்கலாம். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.


தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம்.

தேவையான பொருட்கள் தேங்காய் பால் 1/2 கப், ரோஸ் நீர் 1/2 கப் ரோஜா இதழ்கள் சிறிதளவு. செய்முறை : முதலில் நீங்கள் குளிக்கும் நீரை சிறிது சூடுபடுத்தி கொள்ளவும். அடுத்து அந்த நீரில் தேங்காய் பால், ரேஸ் நீர், ரோஜா இதழ்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது இந்த நீரை குளியலுக்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தின் சொரசொரப்புகள் நீங்கி விடும். அத்துடன் உடல் மிகவும் மென்மையாகவும் ஈர்ப்பத்ததுடனும் இருக்கும்.

தேவையான பொருட்கள்: பாதாம் 6 தேங்காய் பால் 1 ஸ்பூன் செய்முறை: முதலில் பாதாமை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் அந்த பாதாமை தோல் உரித்து கொள்ள வேண்டும். பிறகு, தேங்காய் பாலை சேர்த்து இவற்றை நன்கு அரைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையாக மாறுவீர்கள்.

தேவையான பொருட்கள்: சந்தன பவுடர் 1 ஸ்பூன் தேங்காய் பால் 1 ஸ்பூன் தேன் - 1 ஸ்பூன் குங்குமப்பூ சிறிது செய்முறை: முதலில் சந்தன பவுடர், தேங்காய் பால் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு, இவற்றுடன் தேன் மற்றும் குங்கும பூ சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மின்னும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.