1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
  4. Some simple beauty tips to smooth the palms !!

உள்ளங்கைகள் மிருதுவாக சில எளிய அழகு குறிப்புகள் !!

Palm
சர்க்கரையை விளக்கெண்ணெய்யுடன் கலந்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, தினமும் தூங்கப் போகும் முன் கைகளில் தேயுங்கள். ஐந்து நிமிடம் கைகளைன் முன்னும் பின்னும் தேய்த்து பின் கழுவுங்கள். கடினத்தன்மை மறைந்து மிருதுவான கைகள் கிடைக்கும்.


தாவர வெண்ணெய் சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும். அதனை வாங்கி தினமும் காலை மாலை என இரு வேளைகளில் கைகளில் தேய்த்து வந்தால், கைகளில் ஏற்படும் சொரசொரப்பு நீங்கி விடும். மிதமான ஈரப்பதத்தை அளிக்கும். இது கைகளில் ஏற்படும் சுருக்கத்தையும் போக்குகிறது.

காய்ச்சிய பால் சிறிது எடுத்துக் கொண்டு அதில் கிளசரின் மற்றும் எலுமிச்சை சாறு 4 துளிகள் விடவும். இதனை கலக்கி, கைகளில் தேயுங்கள். நாளடைவில் உள்ளங்கைகள் மிருதுவாகும்.

முட்டை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாதாம் பொடி மற்றும் தேன் கலந்து நன்றாக நுரை வரும்படி கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை கைகளில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊற விடவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், உள்ளங்கைகளில் இருந்த கடினத்தன்மை போய்விடும்.

சோள மாவில் சிறிது நீர் கலந்து கைகளில் பரபர வென்று தேயுங்கள். ஒரு வாரத்தில் உங்கள் உள்ளங்கைகள் மிருதுவாகும். தக்காளி சாறு சிறிது எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை சாறு மற்றும் கிளசரின் சேர்த்து, நன்றாக கலந்து கைகளைல் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

நிறைய நீர் குடிப்பதனை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு குடித்தால் மொத்த சருமமும் மிருதுவாக இருக்கும். உடலில் போதிய அளவு ஈரப்பதம் இல்லையென்றாலும் சொரசொரப்பாக கடினமாக இருக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
எளிதில் கிடைக்கும் முளைக்கீரையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!