சருமத்தை ஈரப்பதத்துடனும் பொலிவுடனும் வைத்திருக்க உதவும் சிம்பிள் டிப்ஸ் !!
பால் அல்லது மோரை வறண்ட சருமத்தின்மீது அடிக்கடி தடவி 10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வறட்சி மாறி சருமம் பளபளப்பாகும்.
அவகேடோவின் சதைப்பகுதியை பேஸ்ட்போல் அரைத்து வறண்ட சருமத்தின்மீது தடவி 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீரில் கழுவவும்.
வெள்ளரிக்காயை அரைத்து சற்று தண்ணீர் சேர்த்த பேஸ்ட்டாக்கவும், பாரஃபின் வாக்ஸை 90 நொடிகள் உருக்கி, அதில் இந்த பேஸ்ட்டை சேர்க்கவும். அதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து சருமத்தின்மீது தடவ மாய்ஸரைசர் செய்ததுபோல் இருக்கும்.
அதிக தண்ணீர் குடிப்பது சருமத்தை ஈரப்பதத்துடனும், பொலிவாகவும் வைக்கும். பாதாம், ஆலிவ், லாவண்டர் போன்ற எண்ணெய்களை சிலதுளிகள் உள்ளங்கையில் எடுத்து, சருமத்தில் தேய்த்து சில நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். சருமம் விரைவில் எண்ணெயை உறிஞ்சிக்கொள்ளும்.
கோகோ பட்டரை மெல்லியதாக வெட்டி, சருமத்தின்மீது மெதுவாகத் தேய்க்க அது கொஞ்சம் கொஞ்சமாக உருகி சருமத்தின்மீது படரும். சிறிதுநேரம் கழித்து கழுவலாம்.
சருமத்துக்கு பிரகாசம் தேவையெனில் பாலேடை பயன்படுத்தலாம். சருமம் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் அதை பாலேட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஈடு செய்யும்.