வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (16:42 IST)

பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான இயற்கை அழகு குறிப்புக்கள் !

Skin Care
5 பாதாம் பருப்பை இரவு முழுவதும் பாலில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அவற்றை தோலுரித்து இரண்டு பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.


இரவில், இந்த பேஸ்ட்டை லேசாக முகம், கழுத்து பகுதிகளில் தடவி, மறுநாள் காலையில் கழுவினால், சருமம் பளபளப்பாகும்.

பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சருமத்தை நச்சுகளை நீக்கி சுத்தம் செய்து பொலிவைப் பெற உதவும்.

கற்றாழையுடன் சிறிது கிளிசரின் கலந்து, பேஸ்ட்டை உங்கள் முகத்தில் லேசாகத் தடவவும். இதை 20 நிமிடம் கழித்து கழுவவும். கற்றாழையில் அலோயின் உள்ளது, இது ஒரு நச்சுத்தன்மையற்ற ஹைப்பர் பிக்மென்டேஷன் சிகிச்சையாக செயல்படுகிறது, சருமத்தை ஒளிரச் செய்கிறது, பிக்மென்டேஷனை முழுவதுமாக நீக்குகிறது.

பிசைந்த வாழைப்பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை கலந்து, ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்கவும். கலவை மென்மையாக இருப்பதை உறுதி செய்து, உங்கள் முகத்தில் தடவவும்.
முழுவதுமாக காய்ந்தவுடன் கழுவி விடவும். உலர்வதற்கு சுமார் அரை மணி நேரம் ஆகும். இந்த மாஸ்க், குழந்தை போன்ற மென்மையான சருமத்தை கொடுக்கும்.

ஒரு தக்காளியை நசுக்கி அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை நன்றாக கலந்து கழுத்து மற்றும் தோலில் தடவவும். இருபது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.