வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் வெற்றிலை !!

நாம் உண்ணும் உணவு முறையாக ஜீரணிக்கப்பட்டு சத்துக்கள் உடலில் முழுமையாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு  சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவையாகும்.

40 வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு சேர்த்து உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும். ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு ஜீரண சக்திகள்  குறைய தொடங்கும்.
 
வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலையானது நீர்ச்சத்து, புரதச் சத்து,  கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது.
 
வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது. இது தவறாகும். பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது  இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும். மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என  சாஸ்திர விதிகள் கூறுகிறது.
 
வெற்றிலை சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கினால் அஜீரணக் கோளாறுகளைப் போக்கும்.
 
வெற்றிலையில் இருக்கும் கல்சியம் மற்றும் இரும்புச்சத்தை நம் உடல் இயற்கையாக ஏற்றுக் கொள்ளும். நம் எலும்புகளுக்கு தேவையான கல்சியம் சத்தை வெற்றிலை கொடுக்கிறது.
 
இருமலைக் குறைக்க வெற்றிலை சாறுடன் கோரோசன் சேர்த்து சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் இருந்தால் வெற்றிலையில் கடுகு  எண்ணெய்யை தடவி மிதமாக சூடேற்றி, மார்பில் சிறிது நேரம் வைத்து எடுக்க வேண்டும்.