புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

வறண்ட சருமத்தை பொலிவு பெற செய்யும் பால் எப்படி...?

அழகு குறிப்புகள் உடலை வறட்சி அடையாமல் இருக்க பால் மிகவும் உதவுகிறது. பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை வறட்சி அடையாமல் இருக்க  உதவுகிறது. 

சருமத்தில் வறட்சியின் காரணமாக, சரும விரிசல் பிரச்சனைகளை சரி செய்ய பால் உதவுகிறது. எனவே பாலை தினமும் உடலில் தடவிவர சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மற்றும் அழகாகவும் காணப்படும்.
 
தினமும் பாலை முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. அதுவும்  பசும்பாலை காய்ச்சாமல் அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவலாம்.
 
உருளைக்கிழங்கை அரைத்து அவற்றில் பால் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.
 
சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க, தினமும் உடல் முழுவதும் பாலை தடவ வேண்டும். இதன் மூலம் சூரிய ஒளியினால் கேடு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்க முடியும்.
 
முகத்தில் தோன்றும் சுருக்கங்களை கட்டுப்படுத்த தினமும் முகத்தில் பால் தடவ வேண்டும். இது முக சுருக்கத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.
 
தினமும் பாலுடன் 1/2 துண்டு வாழைப்பழத்தை சேர்த்து பேஸ்டு போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முக சுருக்கங்கள் மறைந்து  விடும்.