நடிகர் சோனு சூட் சிலைக்கு பால் அபிஷேகம்...பக்தர்களான ரசிகர்கள்
சோனு சூட்டின் தீவிர ரசிகர்கள் இணைந்து சோனுசூட்டின் புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது, புலம்பெயர் மக்கள், தொழிலாலர்கள்,வெளிநாட்டு மாணவர்கள், விவசாயிகள் , ஏழைகள், ஆகியோருக்கு பெரிதும் உதவியர் சோனு சூட்.
சமீபத்தில் கொரொனா நோயாளிகள் 22 பேர் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டுமெனக் கேட்டு இரவில் நடிகர் சோனு சூட்டிற்கு ஒரு கால் வந்துள்ளது. உடனே இதுகுறித்து உண்மை நிலவரத்தைக் கேட்டு உண்மைதான் என்ப்தை உறுதி செய்துவிட்டு, உடனே இரவு என்று பாராது தனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சரி செய்யக் கொடுத்து,22 பேரின் உயிரைக் காப்பாற்றினார். இது நாடு முழுவதும் பேசு பொருளானது. அதேபோல் பல மாநிலங்களில் இந்த ஆக்ஸின் சிலிண்டர் அவசரத் தேவைகளுக்கு உதவியுள்ளார்.
இதுமட்டுமின்றி இன்னும் ஏராளமான மக்களுக்கு அவர் உதவி செய்து வருகிறார். தன் அலைப்பேசிக்கு வரும் அழைப்புக்ளுக்கு தவறாமல் பதில் சொல்லி எல்லா உதவிகளும் செய்து ரியல் ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், ஆந்திரபிரதேசத்தில் உள்ள காலஹஸ்தியில் சோனுசூட்டின் புகைப்படத்திற்கு ரசிகர்களி இணைந்து பாலபிஷேகம் செய்துள்ளனர். அவர் இந்தக் கொரொனா காலத்தில் எல்லோருக்கும் முன்னுதாரணமாக உதவி செய்துவருவதை ஒட்டி இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனர். இது வைரலாகி வருகிறது.
மேலும் இந்த பால் அபிஷேகத்திற்கு நீங்கள் தகுதியுடையவர் என்று ரசிகர்கள் பெருமையுடன் கூறிவருகின்றனர்.