1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (16:43 IST)

முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் அழகு குறிப்புக்கள் !!

Tomato
தேனில் தக்காளித் துண்டை நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.


ஒரு தேக்கரண்டி தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பெரிய துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெறும்.

நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும்.

3 தேக்கரண்டி தக்காளிச் சாறு, 1தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, 2 தேக்கரண்டி மில்க் கிரீம் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும். வாரம் இருமுறை இதுபோன்று செய்து வர வேண்டும்.

2 தேக்கரண்டி தக்காளிச் சாறு, 1 தேக்கரண்டி தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.

முகப்பரு பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இந்த குறிப்புக்களை பின்பற்றுவதால், முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு தக்காளியிலுள்ள  வைட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம். சருமத்துளைகள் சுருங்கும் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும்.