1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (16:39 IST)

உதடுகளை சிவப்பாகவும் மென்மையாகவும் மாற்ற சில அழகு குறிப்புகள் !!

முகத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உதடுகளுக்கும் கொடுக்க வேண்டும். அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தும்போது, உதட்டிற்கு தனி கவனம் செலுத்துவது நல்லது. உதடுகள் சிகப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஈரப்பதம் மிகவும் முக்கியமானதாகும். அவற்றை அடிக்கடி நாவினால் ஈரப்படுத்துவது, மிகவும் தவறான செயலாகும்.


கருப்பு உதடு சிவப்பாக பீட்ரூட் சாறு 2 தேக்கரண்டி, எலு மிச்சை சாறு கால் தேக்கரண்டி, நாட்டுச் சர்க்கரை 3 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாக கலந்து, ஒரு கண்ணாடி குப்பியில் காற்றுப் புகாதவாறு மூடி, குளிர்சாதனப் பெட்டியில் பாது காக்கவும். இதனை தினமும் 2 முறை தடவி வந்தால், உதடுகள் மென்மையாகவும், சிகப்பாகவும் மாறும்.

பன்னீர் ரோஜா இதழ்கள் 20 கிராம் (அரைத்தது), பசுவின் பால் 1 தேக்கரண்டி, இவை இரண்டையும் நன்றாக கலந்து, தினமும் உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிகப்பாகவும், மிருதுவாகவும் காட்சி யளிக்கும்.

உதட்டில் வெள்ளை நீங்க சிறிது கஸ்தூரி மஞ்சளுடன் பசும்பால் கலந்து, பூசி வந்தால் உதடுகள் பளபளப்பாகவும், சிகப்பாகவும் மாறும். மேலும் மஞ்சள் கருமை நிரத்திற்கு காரணமான மெலனின் தடுப்பானாக செயல்பட்டு உதடுகளை ஒளிரச் செய்ய உதவுகிறது.

வெள்ளரிக்காயை சிறு துண்டாக நறுக்கி தினமும் 5 நிமிடங்களுக்கு உதடுகளில் தேய்க்கவும். தினமும் செய்து வர உதடுகளில் நிரமாற்றம் ஏற்படுவதை காணலாம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்யை சம அளவு கலந்து தினமும் தூங்க செல்வதற்கு முன் உதடுகளில் தடவ வேண்டும். இது உதடுகளை சிவப்பாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.

பொதுவாக மசாஜ் செய்யும் பொழுது உதட்டில் இரத்த ஓட்டம் அதிகமாகி உதடு இளஞ்சிவப்பாக மாறும். சிறிதளவு பாதம் எண்ணெய் கொண்டு உதடுகளை மாசஜ் செய்து வர உதடுகள் ஈரப் பதமாகவும், இளஞ்சிவப்பாகவும் மாறும்.