சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?
பனங்கிழங்கின் கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் கிளைசெமிக் லோடு குறைந்துள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக சாப்பிடலாம்,
பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி, உணவு எடுத்தவுடன் குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது.
பனங்கிழங்கில் உள்ள மெக்னீசியம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை தூண்டி, ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன.
மெக்னீசியம் நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் நரம்பு பாதிப்புகளை தடுக்க பனங்கிழங்கு உதவுகிறது.
பனங்கிழங்கில் உள்ள வைட்டமின் சி, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, சர்க்கரை அளவை குறைக்கும்
பனங்கிழங்கில் உள்ள இரும்பு சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.
பனங்கிழங்கில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை சீர்படுத்தி, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
Edited by Mahendran