ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி...?

வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்து கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. அதனை எவ்வாறு எந்தவித இராசாயணம் கலப்பும் இல்லாமல் செய்து என்பதை பார்ப்போம்.
ஹோம்மேட் ஹேர் டை தயாரிக்க தேவையான பொருட்கள்: 
 
மருதாணி பவுடர் - 1 கப்
அவுரி இலை பவுடர் - 1 கப்
எலுமிச்சை பழம் - 3
செய்முறை:
 
முதல் நால் இரவே மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து அல்லது எலுமிச்சை சாறு கலந்து பேஸ்டாக கலக்கி வைக்கவும். மறுநாள்,  எண்ணெய் இல்லாத முடியில் மருதாணி பேஸ்டை பூசி கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். முடியை  நன்கு உலர்த்திய பிறகு, அவுரி இலை பொடியை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து, அதை உடனே தலை முடியில் பூசி விடுங்கள்.  மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர், முடியை வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.
 
இந்த முறையில் முடிக்கோ மண்டைக்கோ எந்த பாதிப்பும் கிடையாது. 100% இயற்கையானது. ஒரு மாதம் வரை முடி கருப்பாக இருக்கும். பிறகு மீண்டும் வெள்ளையானால் மீண்டும் இதே முறையில் செய்து கொள்ளலாம்.