புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

இயற்கையான முறையில் பழங்களை கொண்டு ஃபேஸ்பேக் செய்ய வேண்டுமா...?

வீட்டிலேயே இயற்கை முறையிலான ஃபேஸ் பேக்குகளை அப்ளை செய்வதால் சருமம் பாதுகாக்கப்படுவதுடன் சருமச் சிதைவுகள் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
வறட்சியான சருமத்தினர் தங்களது சரும வறட்சியைத் தடுக்க ஒருசில பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நிச்சயம்  வறட்சியைத் தடுக்கலாம்.
 
தர்பூசணி ஃபேஸ்பேக்: தர்பூசணியை விதையுடன் சேர்த்து விழுதாக அரைத்து, அதோடு 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, 1/4 டீஸ்பூன் கடலைமாவு, 1/4  டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம், கை கால்களில் பேக் மாதிரி போட்டு 1/2 மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவலாம்.
 
திராட்சை பழ ஃபேஸ்பேக்: கருப்பு திராட்சை பழத்தை விதையோடு நைஸாக அரைத்து, அந்த விழுதுடன் 1/4 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன்  எலுமிச்சைச்சாறு சேர்த்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு 2 நாட்கள் அப்படியே வைத்துவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. 2 நாட்கள் கழித்து பார்த்தால் மேலாக வெள்ளை நிறத்தில் ஏடுபோல் படிந்து இருக்கும். இதனை கண்களைச் சுற்றி, முகம், கழுத்து, கை,  கால்களில் போடும்போது தோலில் ஏற்படும் சுருக்கம், கருமையை நீக்கிவிடும்.
அன்னாசி பழ ஃபேஸ்பேக்: நன்றாக பழுத்த பைனாப்பிளின் மேல்தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை அரைத்து ஒரு மெல்லிய துணியால்  வடிகட்டி சாறினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு வெள்ளை சோளமாவு 1 டீஸ்பூன், தயிர் 1/2 டீஸ்பூன், லெமன் ஆயில் 5 சொட்டுகள்  கலந்து 3 மணிநேரம் அப்படியே வைத்துவிட வேண்டும். பைனாப்பிள் ஜூஸில் இருக்கும் என்சைம் மற்றும் சோளமாவு கலந்த இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.
 
மேற்குறிப்பிட்டுள்ள இந்த பழ ஃபேஸ்பேக்குகளை தயாரித்து பத்து நாள்வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். இவற்றை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து முதலில் சற்று சூடான நீரிலும், பின்னர் குளிர்ந்த நீரிலும் கழுவ வேண்டும்.